search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீன பட்டாசுகள்"

    சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்து வரும் பட்டாசுகளை பறிமுதல் செய்ய வேண்டும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    சிவகாசி:

    ஈரோட்டில் பட்டாசு பண்டல்களை இறக்கி வைக்கும்போது வெடி விபத்து ஏற்பட்டு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கார்த்திக் ராஜா, செந்தூர் பாண்டியன், முருகன் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். மேலும் அந்தப்பகுதியில் உள்ள 7 வீடுகள் சேதம் அடைந்தன.

    இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் சிவகாசியில் உள்ள தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடிகள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மாரியப்பன், ஆசைத்தம்பி, ரத்தினகிரி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சில வாரங்களாக சீனாவில் தயாரிக்கப்பட்ட 3 வகையான பட்டாசுகள் இந்தியா முழுவதும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் விரும்பி வாங்கும் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் தற்போது இந்த ஆபத்தான சீன பட்டாசுகள் விளையாட்டுப் பொருட்கள் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.

    பெற்றோர்களும் இந்த பட்டாசால் ஏற்படும் ஆபத்து குறித்து அறியாமல் வாங்கிக் கொடுக்கிறார்கள். ஈரோட்டில் வெடி விபத்து ஏற்பட்டவுடன் பட்டாசு வெடித்து 3 பேர் பலி என்று தான் செய்தி பரவுகிறது. இது உரிய உரிமம் பெற்று தொழில் செய்யும் எங்களை போன்றவர்களுக்கு தலைக்குனிவை ஏற்படுத்துகிறது.

    சிலர் அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பு தொழிலை செய்து வருகிறார்கள். எங்கள் மீது உள்ள இந்த களங்கத்தை போக்க அரசால் மட்டுமே முடியும்.

    ஈரோட்டில் வெடி விபத்தில் வெடித்தது எந்த வகை பட்டாசு? இதை யார் தயாரித்தது? என்று போலீசார் கண்டறிந்து தவறு நடந்து இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த விபத்து குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்து வரும் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பின்னர் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும். தடை செய்யப்பட்ட வெங்காய வெடியை போன்ற தோற்றம் கொண்ட ‘பாப்- பாப்’ பட்டாசுகளை வெடிக்கச் செய்து அதன் ஆபத்துக்களை செயல் முறையில் விளக்கினர். #tamilnews
    புதுவை மாநிலத்தில் சாதரண கடைகளில் ஆபத்தை உண்டாக்கும் சீன பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    திருபுவனை:

    இந்தியாவில் சீன பட்டாசுகளை விற்க பல மாநிலங்களில் தடை உள்ளது. அவற்றில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாலும், உடல்நலத்தை பாதிக்கும் ரசாயனங்கள் கலந்து இருப்பதாலும் தடை விதித்துள்ளனர்.

    ஆனாலும், அதையும் மீறி பல மாநிலங்களிலும் சீன பட்டாசுகள் விற்கப்படுகின்றன. புதுவையிலும் இதேபோன்ற சீன பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    குறிப்பாக திருபுவனை பகுதிகளில் சாதாரண கடைகளிலும் சீன பட்டாசுகளை வாங்கி வைத்து விற்று வருகிறார்கள். இவற்றை குழந்தைகள் ஆர்வத்துடன் வாங்கி சென்று வெடிக்கிறார்கள்.

    லோசாக தீ வைத்ததுமே அவை வெடித்து விடுகின்றன. மேலும் கீழே வீசினாலும் வெடிக்கும் வகையிலான பட்டாசுகளும் உள்ளன. இவற்றால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
    ×